உருளைக்கிழங்கு இருக்கா?10 நிமிடம் போதும் மொறுமொறுப்பான வடை செய்ய..!

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு-அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, புதினா- 1/2 கைப்பிடி(பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2(பொடியாக நறுக்கியது), சோம்பு – 1 ஸ்பூன், கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து நன்கு வேகா வைத்து  கொள்ளுங்கள். 2 அல்லது 3 விசில் வைத்து பின்னர் விசில் அடங்கியதும் உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து கொள்ளுங்கள். பின்னர் இந்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளுங்கள். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, கடலை மாவு, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டையாக உருட்டி அதனை தட்டி வடை போல எண்ணெய்யில் போடுங்கள். நன்கு இரண்டு பக்கமும் வேகவிட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான, சுவையான உருளைக்கிழங்கு வடை ரெடி. இதனுடன் தேங்காய் சட்னி வைத்து கூட சாப்பிடலாம். அல்லது டொமேட்டோ சாஸ் போட்டு சாப்பிடுங்கள். மாலை நேரத்தில் அருமையாக அனைவரும் சாப்பிடுவதற்கு இந்த ஒரு வடை போதும். நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.