உங்க வீட்ல ரவை இருக்கா…? அப்ப இந்த அசத்தலான ரெசிபியை செய்து பாருங்க…!

உங்க வீட்ல ரவை இருக்கா…? அப்ப இந்த அசத்தலான ரெசிபியை செய்து பாருங்க…!

நாம் நமது வீட்டில் உள்ள ரவையை வைத்து, அசத்தலான ஒரு ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். 

நம் நமது வீடுகளில் பல வகையான இனிப்பு பண்டங்களை செய்து சாப்பிடுவதுண்டு. அனால், அனைவருமே அந்த இனிப்பு பண்டங்களை விரும்பி சாப்பிடுவது இல்லை. தற்போது இந்த பதிவில், நாம் நமது வீட்டில் உள்ள ரவையை வைத்து, அசத்தலான ஒரு ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை

  • ரவை- கல் கப்
  • முட்டை – 3
  • வெண்ணெய் – 2 ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • நெய் – தேவையான ளவு

சீனிபாகு 

  • சீனி – அரை கப்
  • தண்ணீர் – கால் கப்

செய்முறை

முதலில் நாம் புட்டிங் செய்யவுள்ள பாத்திரத்தில் நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், அரை கப் சீனியை போட்டு, கால் தண்ணீர் ஊற்றி சீனி பாகு செய்ய வேண்டும். அது நன்கு பிரௌன் கலரிங் வந்த பின் நெய் தடவி வைத்துள்ள பாத்திரத்தில் ஊறி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில், அரை லிட்டர் கெட்டியான பால் ஊற்றி நன்கு பொங்கி வரும் வரை காய்ச்ச வேண்டும். பின் அதனுள் அரை கப் சுகர் சேர்க்க வேண்டும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்க வேண்டும். பின் கால் கப் ரவை சேர்க்க வேண்டும். 3 நிமிடம் மிதமான தீயில் வைத்திருக்க வேண்டும்.

பின் ஒரு பௌலில் மூன்று முட்டை சேர்த்து, ஏலக்காய் தூள் சேர்த்து பால் கலவையை ஆறியவுடன், முட்டையுடன் சேர்த்து நன்கு கிளறி பின், சீனி பாகு உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஒரு மூடியால் மூடி, இட்லி அவிக்கும் பாத்திரத்தினுள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுள் இதை வாய்த்து, 40 நிமிடம் மிதமான தீயில் வேக விட வேண்டும். இப்பொது சுவையான ரவை புட்டிங் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube