உங்களுக்கு இதய பிரச்சனை உள்ளதா? அப்ப இதை சாப்பிடுங்க!

வால்நட்டில் உள்ள மருத்துவ  குணங்கள். இன்று பலருக்கு மிக சிறிய வயதிலேயே இதய

By leena | Published: Jul 09, 2020 10:51 AM

வால்நட்டில் உள்ள மருத்துவ  குணங்கள். இன்று பலருக்கு மிக சிறிய வயதிலேயே இதய பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான். நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் நம்மை ஒரு நோயாளியாகவே மாற்றி விடுகிறது. ருசியான உணவுகளை  சாப்பிட வேண்டும் என விரும்பும் நாம், உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என விரும்புவதில்லை. தற்போது இந்த பதிவில் இதய நோயை குணப்படுத்தக் கூடிய, வால்நட்டின் மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்.

இதய பிரச்சனை

வால்நட்டில் அழற்சிக்கு எதிராக செயல்படக் கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இந்த அமிலங்கள் ஆர்திரைட்டிஸ் மற்றும் இதய நோய்  ஏற்பாடக் கூடிய ஆபத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குழந்தையின் மூளை வளர்ச்சி

ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகள் ஞானமுள்ள, அறிவுள்ள, புத்திசாலியான குழந்தையாக தான் வளர வேண்டும் விரும்புவர். அவர்களின் மூளை வளர்ச்சி மேம்பட, அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அந்த  வகையில், வால்நட்டில் இருக்கும் பாலிபினால், லியோனிடிக் கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் இ குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவுகிறது.

புற்றுநோய்

இன்று உயிரை பறிக்கும் புற்றுநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில்,இந்த நோய் வரமால் தடுக்க அவர்கள் முன்கூட்டியே எந்த சத்தான உணவுகளையும் உட்கொள்வதில்லை. அந்த வகையில், வால்நட்டில் உள்ள எல்லாஜிக் அமிலம் மற்றும் எல்லாஜிடனின் போன்ற ஆக்சிஜனேற்ற பொருட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு, இந்த நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது.
Step2: Place in ads Display sections

unicc