பெண்களே உங்கள் வீட்டில் இந்த பிரச்சனைகள் உள்ளதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

பெண்களே உங்கள் வீட்டில் இந்த பிரச்சனைகள் உள்ளதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது அன்றாட வாழ்வில் வீட்டு உபயோகத்திற்காக மற்றும் நமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பலவிதமான பொருட்களை பயன்படுத்துகிறோம். வீட்டில் உள்ள அனைத்து பெண்களுமே, வீட்டில் உள்ள பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதுண்டு.

அந்த வகையில், தற்போது இந்த பதிவில், வீட்டில் உள்ள பொருட்களை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

வெள்ளி பாத்திரங்கள்

வெள்ளி பாத்திரங்கள் அனைவரின் இல்லத்திலுமே இருக்கக் கூடிய ஒன்று தான். ஏனென்றால், பெண்கள் திருமணமாகி மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் போது, பெற்றோர்கள் சில வெள்ளி பாத்திரங்களை சீதனமாக கொடுப்பதுண்டு.

Image result for வெள்ளி பாத்திரங்கள்

சில வேளைகளில் வெள்ளி பாத்திரங்கள் கறுத்து போகக்கூடிய சூழ்நிலை கூட ஏற்படும். எனவே வெள்ளி பாத்திரங்கள் உள்ள பைகளில் கற்பூரத்தை போட்டுவைத்தால் வெள்ளி பாத்திரங்கள் கறுக்காது.

இஸ்திரி பெட்டி

அயர்ன் பாக்ஸ் இன்று பெரும்பாலானோர் இல்லத்தில் உபயோகிக்கப்படுகிறது. இந்த அயர்ன் பாக்ஸ் நாட்கள் செல்ல செல்ல அதன் அடிப்பகுதியில், கறை பிடித்து விடுகிறது.

Image result for இஸ்திரி பெட்டி

இந்த கறையை போக்க வேண்டும் என்றால், அதன் மேல் சமையல் எண்ணெயை தடவி, அயர்ன் பாக்ஸை ஆன் செய்து வைத்து சிறிது நேரம் வைத்து விட்டு, பின் ஒரு துணியை வைத்து துடைத்தால், அந்த கரை போய்விடும்.

புதிய காலனி

காலனி என்பது அனைவருமே பயன்படுத்தக் கூடிய ஒன்று தான். நாம் புதிய காலனியை பயன்படுத்தும் போது, அது நமது காலில் காயங்களை ஏற்படுத்தக் கூடும்.

Image result for புதிய செருப்பு

எனவே புதிய செருப்பின் மேல் பாகத்தின் அடியில் மெழுகுவர்த்தியை வைத்து நன்றாக தேய்த்து, பிறகு அனைத்து கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

மர இருக்கைகள்

நம்மில் அதிகமானோர் வீட்டில் மரத்தினால் செய்யப்பட்ட கட்டில்கள், இருக்கைகள் இருப்பதுண்டு. அவை நாட்கள் செல்ல செல்ல பழமையான தோற்றத்தை அளிக்கிறது.

Image result for மர இருக்கைகள்

அப்படிப்பட்ட பொருட்களின் மீது, சிறிதளவு நீரில் கடுகு எண்ணெய் கலந்து, அதில் மிருதுவான துணியை நனைத்து, துடைத்து வந்தால் வார்னீஷ் செய்தது போல பளபளவென இருக்கும்.

அணிகலன்கள்

Related image

பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அணிகலன்கள் தான். இந்த அணிகலன்களை பெண்கள் பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள் என்றாலும், சில வேளைகளில் அதன் பொலிவினை இழந்து விடுகிறது.

எனவே, அணிகலன்களை நாம் அலமாரியினுள் வைக்கும் போது. பஞ்சில் சுற்றி வைத்தால், அணிகலன்கள் புது பொலிவுடன் காணப்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *