சைக்கிள் ஓட்டுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

சைக்கிள் ஓட்டுவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் நமது உடல்நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த சைக்கிள் தொடர்ச்சியாக ஓட்டுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்த பிறகு சைக்கிள் தற்பொழுது பயன்பாடற்ற ஒரு பொருளாக மாறி விட்டது. ஆனால் இந்த சைக்கிளை நான் ஓட்டும் போது இதயத் துடிப்பு சீராக உதவுவதுடன் வயது முதிர்வு காரணமாக ஏற்படக்கூடிய இதய நோய்கள், இதய வலுவிழப்பு மற்றும் இதய அடைப்பு போன்றவற்றை தடுக்க பயன்படுகிறது. டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் கால் தசை, தொடைப் பகுதி தசைகள், இடுப்புப் பகுதி போன்றவை வலிமை பெற உதவுவதுடன் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த சைக்கிளை தொடர்ச்சியாக ஓட்டலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் பாதுகாப்பதுடன் மூளையின் செயல்திறனை அதிகரித்து உடல் நோயற்று காணப்பட உதவுகிறது. மனதளவில் புத்துணர்ச்சி கொடுக்க உதவுவதுடன் மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றை நீக்கவும் அதிக வியர்வையை வெளியில் கொண்டு வரவும் உதவுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். மேலும் மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பது உடல் பருமன் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

author avatar
Rebekal