முகத்திலுள்ள கரும்புள்ளி மறைந்து பளிச்சிடும் முகம் பெற இதை செய்யுங்கள்!

முகம் புத்துணர்ச்சியாக அழகாக இருந்தாலே நாம் செய்யும் செயல்களும், நாமும்

By Rebekal | Published: May 06, 2020 08:06 AM

முகம் புத்துணர்ச்சியாக அழகாக இருந்தாலே நாம் செய்யும் செயல்களும், நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால், முகத்தில் வரக்கூடிய கரும்புள்ளிகள் முக அழகையே கெடுத்து விடும். 

இதற்காக கரி மாஸ்க் {Charcoal Mask} கடைகளில் வாங்கி உபயோகிக்கின்றோம். இவை பலன் அளிக்கும், ஆனாலும் நிரந்தரமாக இருக்காது. இதற்கான நிரந்தர தீர்வை இயற்கையாக பார்க்கலாம் வாருங்கள். 

தேவையானவை 

  • கஸ்தூரி மஞ்சள் தூள் 
  • எலுமிச்சை 
  • தயிர்  
  • தேன் 

செய்முறை 

முதலில் கஸ்தூரி மஞ்சளை சின்ன கின்னியில் வைத்து அடுப்பில் கருகவைத்து  கொள்ளவும். அதன் பிறகு அந்த தூளில் எலுமிச்சை சாற்றை கலந்து வைக்கவும். 

பின் தயிர் அல்லது தயிருக்கு பதிலாக தேன் ஏதேனும் ஒன்றை உபயோகித்து நன்றாக கலக்கவும். அந்த கலவையை முகத்தில் போட்டு 20 நிமிடம் களைத்து கழுவிவிடவும்.

இது போல தொடர்ந்து செய்து வந்தால் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைந்து அழகிய புத்துணர்ச்சியாக முகம் கிடைக்கும். 

Step2: Place in ads Display sections

unicc