நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை பண்ணுங்க!

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இன்று ஏற்படும் கொள்ளை நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன  செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தூக்கம்

நமது உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் தேவையான ஒன்று. தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது.
இது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும்  மிகவும் அவசியமானது.

தண்ணீர் குடித்தல்

நமக்கு தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்று. தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.
இது உடல் வெப்பத்தை சீராகப்  பராமரிப்பதோடு, மெட்டபாலிசத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

காய்கறிகள்

நமது அன்றாட உணவில் முக்கியமாக காய்கறிகளை சேர்க்க வேண்டும். முக்கியமாக, பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடமிளகாய் போன்றவை அவசியம் வேண்டும். மேலும், இதனுடன் கீரை வகைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்த்துக் கொள்வதால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.