ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க இதை மட்டும் செய்யுங்கள் – டாக்.ராமதாஸ்

இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், தற்போது ஓமைக்ரான் வகை வைரஸ் பரவுவதால், தமிழகத்தில் இந்த வைரஸ் பரவாத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த  வகையில்,இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்தவழி தடுப்பூசி செலுத்துவதையும் கொரோனா சோதனை செய்வதையும் தீவிரப்படுத்துவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். அந்த நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்!

ஓமைக்ரான் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம். அதனால் பொதுமக்கள் தயக்கமின்றி, தமிழக அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஓமைக்ரான் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்!

ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவத் தொடங்கினால் ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும். இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்!’ என பதிவிட்டுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

ஐபிஎல்2024: ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி…

2 hours ago

ஐபிஎல்2024: சதம் விளாசிய சுனில் நரேன்.. ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா ..!

ஐபிஎல்2024: முதல் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதி…

4 hours ago

ஐபிஎல் 2024 : மீண்டும் இணைந்த அஸ்வின் – பட்லர் ! டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு !

ஐபிஎல் 2024 :  ஐபிஎல் தொடர் இன்றைய போட்டியில் தற்போது கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின்-17 வது சீசனில்…

6 hours ago

6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது!

Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு…

6 hours ago

ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…

7 hours ago

ஐபிஎல் போட்டியில் டாஸ் ஃபிக்சிங்? சர்ச்சையை கிளப்பிய டு பிளெசிஸ் வீடியோ !

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும்…

7 hours ago