ரெடிமேட் உணவு பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

ரெடிமேட் உணவு பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

By leena | Published: Jul 30, 2020 06:15 AM

ரெடிமேட் உணவு பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

இன்றைய நாகரீகமான சமூகத்தில் வாழும், இன்றைய தலைமுறையினர் உணவு உண்ணும் விஷயங்களில், பாரம்பரிய உணவுகளை அநாகரீகமாக தான் கருதுகின்றனர். இன்றைய தலைமுறையினருக்கு நாகரீகமாக தெரிவது, உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய மேலை நாட்டு உணவுகள் தான். அதிலும், நாம் நமது வீடுகளில் உணவுகளை தயார் செய்து சாப்பிடுவதை தவிர்த்து, கடைகளில் ரெடிமேட்டாக விற்க கூடிய உணவு பொருட்களை தான் வாங்கி சாப்பிடுகிறோம்.

தற்போது இந்த பதிவில், ரெடிமேட் உணவு பொருட்களில் தீமைகள் பற்றி பார்ப்போம்.

இயற்கையாக, தண்ணீரை பயன்படுத்தும் போது, பத்து நாட்கள் சென்றால் அது புழு வைக்க வேண்டும். பழங்கள் என்றால், குறிப்பிட்ட நாளில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும். காய்கறிகள் என்றால், சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும். நவதானியங்கள் என்றால், கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும். இவ்வாறு இருந்தால் அது இயற்கையான உணவு என்று கூற முடியும்.

இயற்கையின் விதிப்படி, ஒரு குறிப்பிட்ட நாளில், எது கேட்டு போகிறதோ, புழு வந்து வைக்கிறதோ, எது அழுகி நாற்றமெடுக்கிறதோ, எது ஊசி போய் வீணாகிறதோ அது தான் நல்ல தரமான தீங்கில்லாத உணவு பொருட்கள் என்று கருதப்படுகிறது.

ஆனால், இன்று நாம் பயன்படுத்தும், பாட்டில் தண்ணீர், 3 மாதங்கள் ஆனாலும் புழு வைப்பதில்லை. ஆனால், இதை தான் நாம் நல்ல தண்ணீர் என்று வாங்கி பருகுகிறோம். பழமுதிர் சோலைகளிலும், மெகா சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்டு 1 வாரம் ஆனாலும், பளபளப்பாக இருக்கும் பழங்கள், காய்கறிகளை எப்படி சத்தானது என்று நாம் நிச்சயிக்க கூடும்?

டிவி விளம்பரங்களை பார்த்து நாம் பயன்படுத்தும் உணவு மற்றும் அழகு சாதன பொருட்கள் அனைத்துமே நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய  ஒன்றாக தான் இருக்கும். ரெடிமேட் உணவுகளை பொறுத்தவரையில், நாம் அதை உண்ணும் போது நமது உடல் ஆரோக்கியத்தை சீரழிக்க கூடிய உணவும் என்பதை மறந்து விடக்கூடாது.

Step2: Place in ads Display sections

unicc