ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது! - மு.க.ஸ்டாலின்

ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து

By leena | Published: May 22, 2020 12:30 PM

ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது.

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் ஆலையை அடியோடு அகற்ற வேண்டும் என அம்மாவட்ட மக்கள், 2018-ம் ஆண்டு மே-22ம் நாள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். இவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் 100-வது நாள் போராட்டம் தான் மே-22ம் தேதி நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டம் ஆகும்.  

இந்த போராட்டத்தின் பொது, காவல்துறையினரால், ஈவு இரக்கமின்றி 15 அப்பாவி மக்கள் சுட்டு  கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இன்று இவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில்,'இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நிரூபித்த நாள் இன்று! மே 22. தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது! #ADMKstrelitemurder -ன் ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது!' என பதிவிட்டுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc