உங்களது பிராண்டை பிரபலமாக்க கமலா ஹாரிஸின் பெயரை உபயோகிக்க வேண்டாம்…! மீனா ஹாரிஸுக்கு வெள்ளை மாளிகை அட்வைஸ்…!

அமெரிக்க துணை அதிபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களது வணிகத்தையோ அல்லது சமூக வலைதள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ் ஃபினோமெனல் என்ற பெயரில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆடைகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவர் தனது பிராண்டை பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால்,  அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் தனது அத்தையான கமலா ஹாரிஸின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகைக்கு புகார்கள் வந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் vice-president aunty  என்ற வாசகங்களுடன் அச்சடிக்கப்பட்ட  shirt அதிகம் விற்பனையானது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் சட்டக்குழு,  இதுகுறித்து மீனா ஹாரிஸுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி அமெரிக்க துணை அதிபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி உங்களது வணிகத்தையோ அல்லது சமூக வலைதள பக்கங்களையோ பிரபலமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.