பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குடும்பத்துடன், பழனி கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் காவிரி, கோதாவரி அமைப்பு திட்டம் வரப்பிரசாதம் போன்றது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், கமல் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், தம்மையும், அவரது தந்தை ராமதாஸையும், முதல்வர் பழனிசாமி மூவரையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரம்தாழ்ந்து விமர்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.