கொரோனா ஆராய்ச்சிக்கு பணத்தை செலவழியுங்கள்.! ஆயுதங்களுக்கு வேண்டாம்.!

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்

By gowtham | Published: Jun 01, 2020 03:19 PM

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போப் கேட்டுக் கொண்டார்.

உலகம் முழுவதும் கொரோனா 60லட்சத்தை கடந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்னும் ஓயாத கொரோனா அலையால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 6,267,338 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 373,961 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்சிஸில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி சுமார் 3மாத காலத்திற்கு பிறகு நடந்தது இதில் 130க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் போப் தேசியத் தலைவர்கள் எல்லாரும் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் என்றும் எப்போ சுழிநிலையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். மேலும் பொருளாதார மற்றும் சமூகத் தீர்வுகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பு முயற்சிக்கு ஆராய்ச்சியில் ஈடுபட பயன்படுத்த வேண்டும் என்று நாட்டின் தலைவர்களை கேட்டு கொண்டார் போப்.

Step2: Place in ads Display sections

unicc