வாட்சனை நீக்க கூடாது… கவுதம் கம்பீர்..!

ஷேன் வாட்சன் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அடுத்த ஐந்து போட்டிகளிலும் அவரை கட்டாயம் நீக்கவே கூடாது என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் வெற்றி பெற்று 4 போட்டிகள் தோல்வியடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

மேலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சென்னை அணி இன்று தனது 7 வது போட்டியில் பெங்களூர் அணியுடன் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னுக்கு செல்லும் நோக்கத்துடன் சென்னை அணி வீரர்கள் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு தேவையான துவக்கத்தை கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்றே கூறலாம்.

இந்த நிலையில் சென்னை அணி தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் கூறியதாவது, சென்னை அணி சிறப்பாக விளையாட துவங்க வேண்டும். ” தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் அனைத்துப் போட்டிகளிலும் கண்டிப்பாக விளையாட வேண்டும் . அவரை நீக்கவே கூடாத.

சென்னை அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் சரி இல்லை ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அம்பத்தி ராயுடு கேதர் ஜாதவ் ஆகிய வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில் முரளிவிஜய் இறங்குவது சரியாக இருக்காது.

அதேபோன்று ஷேன் வாட்சன் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அடுத்த ஐந்து போட்டிகளிலும் அவரை கட்டாயம் நீக்கவே கூடாது, மேலும் சென்னை அணி வெற்றியை தொடங்கினால் தான் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.