விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது…! மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன் …!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்த பிறந்தநாளாக கருதப்படுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்த பிறந்தநாளாக கருதப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.