இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம்…!அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறுகையில்,அம்மாவின் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் தீபாவளிக்கு திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தோம். அந்த மன உளைச்சல் இன்றைக்கு தீர்ந்திருக்கிறது.இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம் .அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை. நடிகர் விஜய் ரசிகர்களின் இல்லங்களிலும் அரசின் விலையில்லா பொருட்கள் உள்ளது என்றும்  அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.