எல்லை விவகாரத்தில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பக்கூடாது.. பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை!

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து ஆதாரமற்ற எந்தொரு தகவலையும் ஊடங்கள் வெளியிடக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தற்பொழுது தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள், சீனா எல்லைக்கு உட்பட்ட “மால்டோ” என்ற இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில், லெப்டினன்ட் ஜெனரழும், லே பகுதியின் தளபதியுமான ஹரிந்தர் சிங் மற்றும் சீனா தரப்பில் தெற்கு ஸின்ஜியாங் ராணுவ மண்டல தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 

இதுகுறித்து ஊடங்கள் வெளியிட்ட செய்திதொகுப்பில், ஏப்ரல் மாத இறுதியில் எல்லைகள் எப்படி இருந்ததோ, அப்படியே கடைபிடிப்போம் என்பது இந்தியாவின் கோரிக்கை. சீனா, எல்லையில் இந்தியா மேற்கொண்டு வரும் சாலை அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது. இதனை இந்திய அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். பேச்சுவார்த்தை முடிவடைந்ததை அடுத்து, இந்திய அதிகாரிகள் குழு, மீண்டும் லே பகுதிக்கு திரும்பினர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியா, சீனா அதிகாரிகள் ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் உருவாக்கப்பட்ட வழிகள் மூலமாக, தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஈடுபாடுகள் குறித்து யூகமாகவோ, ஆதாரமற்றத் தகவல்களையோ வெளியிடுவது உதவிகரமாக இருக்காது. எனவே, இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து ஆதாரமற்ற எந்தொரு தகவலையும் ஊடங்கள் வெளியிடக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.