சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது ..!உச்சநீதிமன்ற   நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு..!

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது ..!உச்சநீதிமன்ற   நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு..!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார். 

கடந்த ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த விசாரணையில் ஏன் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது? இந்து மதத்தில் தடை ஏதும் உள்ளதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.பின் சபரிமலை தேவசம் போர்டு தரப்பில் சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படியே மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.மேலும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

Related image

இந்த விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தது.உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்குகிறார்கள்.அதேபோல்  நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, சந்திரசூட், ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் தனித்தனியாக தீர்ப்பு வழங்கினார்கள் .சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது.ஆண்-பெண் இருவரும் சமமானவர்கள்.பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல.சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்துள்ளார்.சபரிமலை கோயில் பக்தர்கள் மட்டும் தனி மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார்.

Image result for sabarimala

இதன் பின்னர்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நீதிபதி கன்வில்கருடன் இணைந்து ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்தனர். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.அதில் நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதி கன்வில்கர், நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழகியுள்ளனர்.ஆனால் தலைமை நீதிபதி அமர்வில்  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அவர் அளித்த தீர்ப்பில் மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது.வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும்.மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக்கூடாது.சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார். 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *