வேறு இயக்கத்திற்கு செல்கிறேனா ?அதிமுகவில் பொறுப்பில் இருந்து விலகிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம்

அதிமுக கட்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் அம்மா பேரவையில் இணை செயலாளராக அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்து வந்தார்.நேற்று அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமை கடிதத்தை முதல்வரிடம்  அளித்தார்.

இதன் பின்னர் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறுகையில்,சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறி தான் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன்.நான் வேறு இயக்கத்திற்கு செல்வதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment