சத்ரபதி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன் ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங் செய்வதாக சில காலமாக வதந்திகள் பரவி வந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே ஸ்ரீனிவாஸுடன் ராஷ்மிகா இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. இதுவே, வதந்திகளைத் தூண்டியது.

இந்த நிலையில், தற்போது அதற்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த வதந்தி எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது முற்றிலும் ஆதாரமற்றது என்று நினைக்கிறேன், ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.

நான் அவரை காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் மும்பைக்கு வருகிறோம், எனவே நாங்கள் ஒருவரையொருவர் பலமுறை சந்தித்து இருக்கலாம். இதன் காரணமாக சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கலாம்.

என்னை பொறுத்தவரை நாங்கள் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்கள். ராஷ்மிகா ஒரு சிறந்த நடிகை. படப்பிடிப்பு தளங்களில் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார்” என புகழ்ந்து பேசி காதல் வதந்திக்கு ஸ்ரீனிவாஸ் முற்று புள்ளி வைத்துள்ளார்.