முக சுருக்கங்கள் உங்கள் இளமையை மறைக்கிறதா? இதை மாற்ற சில இயற்கை குறிப்புகள் அறியலாம் வாருங்கள்..!

முக சுருக்கங்கள் உங்கள் இளமையை மறைக்கிறதா? இதை மாற்ற சில இயற்கை குறிப்புகள் அறியலாம் வாருங்கள்..!

பெண்களுக்கு 35 முதல் 40 வயது தொடங்கும் பொழுது முகத்தில் சுருக்கங்கள் விழ தொடங்கிவிடும். பல பெண்கள் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம் தான். ஆனால் இந்த முகச்சுருக்கம் அவர்களது வயதை காட்டிக் கொடுத்து விடும். எனவே முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்குவதற்காக செயற்கையான கிரீம்களை நாடி சென்று விடுகிறார்கள். இது சில நாட்களுக்கு மட்டுமே பலனளிக்கும். நீண்ட நாட்களுக்கு முக சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும், ஏற்கனவே வந்த முக சுருக்கங்களை நீக்குவதற்கும் சில இயற்கை வழிமுறைகளை நாம் இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆரஞ்சு பழ தோல்

ஆரஞ்சு பழ தோலை உலரவைத்து பொடி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் இதனுடன் பால் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். ஆரஞ்சு பழ தோலில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் காரணமாக முக சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவு பெரும்.

Orange

கிரீன் டீ

இந்த கிரீன் டீ பெரும்பாலும் பல இயற்கை அழகு சாதன தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள கேட்டசின்ஸ் எனப்படும் பாலிபினோலிக் கலவை மற்றும் ஆக்சிஜனேற்ற தன்மை காரணமாக முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

சந்தனம்

சந்தனம் உபயோகிப்பதன் காரணமாக முகத்தில் காணப்படக்கூடிய சுருக்கங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், சருமத்தின் பொலிவையும், நிறத்தையும் அதிகரிக்க செய்கிறது. மேலும் முகத்தில் காணப்படக்கூடிய முகப்பருக்களை நீக்கி, தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.

தயிர்

தயிரில் அதிகளவில் மெலினியம் உள்ளதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க உதவுவதுடன், முகத்தை பளபளப்பாக்கவும் வறண்ட சருமத்தை பொலிவுற செய்யவும் உதவுகிறது.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயில் அதிக அளவு ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது. இதன் காரணமாக சருமத்தில் சுருக்கங்கள் உருவாகுவதற்கு காரணமாக பிரீரேடிக்கல் செல்களுடன் போராடி, முக சுருக்கங்களில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

காப்பி தூள்

காப்பி தூளில் அதிகளவு ஆக்சிஜனேற்ற தன்மை உள்ளது. இந்த காப்பி தூளுடன் தேன் கலந்து முகத்தில் பூசினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்கி முக சுருக்கங்கள் மறைய வழிவகுக்கும். மேலும் சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கவும் இது உதவும்.

ஆப்பிள்

ஆப்பிளில் ஹைட்ராக்ஸி அமிலம் அதிகளவில் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலமாகவும், முகத்தில் பூசிக் கொள்வதன் மூலமாகவும் வறண்ட மற்றும் சுருக்கம் உள்ள தோல்களை மாற்றி, சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் மறைக்கவும் இது உதவுகிறது.

seeds

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் ஆக்சிஜனேற்ற தன்மைகள் மற்றும் வைட்டமின்- E அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக முகத்தில் காணப்படக்கூடிய முக சுருக்கங்களை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சள் உபயோகிப்பதன் மூலமாக முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முகத்திலுள்ள புள்ளிகள் மறைவதற்கு உதவுகிறது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube