குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுமா?

குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுமா?

குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்.

குழந்தைகள் என்றாலே எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள் என்று நாம் நினைப்பது உண்டு. தானும் மகிழ்ச்சியாக இருந்து பிறரையும் மகிழ்விக்கும் குணம் கொண்டவர்கள் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் குழந்தைகளுக்கும் பல விதத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று  பார்ப்போம்.

குடும்பத்தில் குழப்பம்

பல குடும்பங்களில் கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் தானே அவர்களுக்கு என்ன தெரிய போகிறது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த பிரச்சனைகள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களையும் பாதிக்கிறது.

நெருக்கமானவர்களின் பிரிவு

குழந்தைகளை பொறுத்தவரையில், யாருடன் வேண்டுமானாலும் மிக எளிதில் பழகி விடுவார். ஆனால், அந்த உறவை விட்டு அவர்கள் எளிதில் பிரிவதும் கடினம். அவ்வாறு அந்த உறவில் பிரிவு உண்டாகும் போது, அது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செல்லப்பிராணிகள்

நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை ஆசையாய் வளர்ப்பதுண்டு. அவைகள் மீது நமது குழந்தைகளும் அளவு கடந்த பாசம் வைப்பதுண்டு. அந்த செல்ல பிராணிகள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டால், இதுவும் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

Latest Posts

நேற்று நடந்த போட்டியில் தோனி 7வது இடத்தில் இறங்கியது ஏன்..?
பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு.!
2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.!
ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் -  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை - மு.க. ஸ்டாலின்
கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!
கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்!
மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..!