வருகிற 2021 -ல் வங்கிகள் எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா? வாருங்கள் அறியலாம்!

வருகிற 2021 -ல் வழக்கமானா சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை தவிர்த்து வங்கிகள் எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பொதுவாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வங்கிகளுக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அரசு வேலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறை கிட்டத்தட்ட வங்கிகளுக்கும் கொடுக்கப்படும். அவ்வாறு வரப்போகும் புதிய வருடமாகிய 2021 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா?

ஜனவரி 26 செவ்வாய் கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை, மார்ச் 11 வியாழக்கிழமை சிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை, மார்ச் 29 திங்கள் கிழமை ஹோலி பண்டிகைக்காகவும், ஏப்ரல் 1 வியாழக்கிழமை கணக்கு முடிவு, ஏப்ரல் 2 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி, ஏப்ரல் 14 புதன் கிழமை அம்பேத்காரின் பிறந்தநாளுக்காகவும் விடுமுறை கொடுக்கப்படுகிறது. ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை மஹாவீரர் ஜெயந்திக்காகவும், மே 13வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகைக்காகவும், ஜூலை 20 செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டும், ஆகஸ்ட் 15 ஞாயிற்று கிழமை சுதந்திர  தினத்திற்காகவும், ஆகஸ்ட் 19 வியாழக்கிழமை மொஹரம் பண்டிகைக்காகவும் விடுமுறை கொடுக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 30 திங்கள்கிழமை கிருஷ்ணஜெயந்திக்காகவும், செப்டம்பர் 10 வெள்ளிக்கிழமை விநாயகர் சதூர்த்தி, அக்டோபர் 2 சனிக்கிழமை மஹாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை தசராவுக்காகவும், நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளியை முன்னிட்டும், நவம்பர் 19 வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்திக்காகவும், டிசம்பர் 25 சனிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்திற்காகவும் வங்கிகளுக்கு விடுமுறை கொடுக்கப்படுகிறது.

author avatar
Rebekal