திமுக தொடர்ந்த வழக்கு -ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு

திமுக தொடர்ந்த வழக்கு -ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு

முரசொலி தொடர்பான வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து  முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

எனவே முரசொலி  இடம் பஞ்சமி நிலம்  என்று பாமக நிறுவனர்  ராமதாஸ் , பாஜகவின் சீனிவாசனும் கூறியதை எதிர்த்து  எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஆவணங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ,மார்ச் மாதம்  20-ஆம் தேதி  பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த சீனிவாசன்  நேரில் ஆஜராகுமாறு  எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Join our channel google news Youtube