திமுகவின் போலி சமூகநீதி சாயம் வெளுத்து விட்டது -அமைச்சர் எம்.சி சம்பத்

திமுகவின் போலி சமூகநீதி சாயம் வெளுத்துவிட்டது என்று அமைச்சர் எம்.சி சம்பத்  தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

 இந்த விவகாரம் தொடர்பாக, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா செய்யப்பட்டார். பின்பு சிந்துஜாவை புவனகிரி காவல்துறை கைது செய்தது.மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.  மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாக உள்ளார்.இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், கடலூர் ஊராட்சி மன்றத்தலைவி அவர்களை தீண்டாமை கொடுமைக்குள்ளாக்கிய துணைத்தலைவர் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து சமூகநீதியை நிலைநாட்டியுள்ளது மாண்புமிகு அம்மாவின் அரசு. தனது கட்சிக்காரர் என்பதற்காக கண்டிக்காமல் மௌனம் சாதிக்கும் திமுகவின் போலி சமூகநீதி சாயம் வெளுத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.