தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி… முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.!

தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி… முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.!

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. திமுக நேரடியாக 125 இடங்களில் முன்னிலையில் பெற்று, தனி பெரும்பான்மையுடன் முக ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கவுள்ளார்.

இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை தற்போது  ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி. தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்து அனுப்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக வரும் 7ம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். சட்டப்பேரவை தேர்தலில் தனி தனி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடித்த நிலையில், பதவி ஏற்கிறார். கொரோனா பரவ காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், அண்ணா அறிவாலயம் சென்றார் முக் ஸ்டாலின். முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோபாலபுரம் இல்லம் சென்று தாயாரிடம் வாழ்த்து பெற்றதை தொடர்ந்து அறிவாலயம் சென்றுள்ளார். மேலும், முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube