இந்த மிரட்டலுக்குலாம் திமுக பயப்படாது : மு.க.ஸ்டாலின்

16

தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல கோடிகள் சிக்கியுள்ளது. இந்நிலையில், திமுக .ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று கூறியுள்ளார்.

மேலும், மத்தியில் உள்ள ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள ஆட்சியையும் அகற்ற மக்கள் உறுதி பூண்டுள்ளனர் என்றும், ஆளுங்கட்சியினர் கோடிக்கோடியாய் பணம் கொடுத்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.