இதனை அதிமுக செய்யாவிட்டால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம்.! - மு.க.ஸ்டாலின் கருத்து.!

புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது முன்னாள்

By manikandan | Published: Aug 02, 2020 02:31 PM

புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவிற்கு செய்யும் துரோகம் எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்டுள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழி கொள்கை, 3,5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என பலவேறு அம்சங்கள் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கை 2020 பற்றிய கருத்து மேடை நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், '  புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, அதனை நிராகரிக்க வேண்டும் எனவும், புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவிற்கு செய்யும் துரோகம்.' எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை கூறியுள்ளார்.

மேலும், ' புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி உண்மைக்கு எதிரான கருத்துகளை வெளிபடுத்திவருகிறார். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். ' எனவும் தனது கருத்தை முக.ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc