வரும் 26-ஆம் தேதி கூடுகிறது திமுக எம்.பி.க்கள் கூட்டம்

திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  வருகின்ற 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலயில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  வருகின்ற 26-ஆம் தேதி அன்று பகல் 12 மணிக்கு சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.