29 C
Chennai
Sunday, October 24, 2021

திமுக எம்.பி. ரமேஷை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி – குற்றவியல் நடுவர் நீதிமன்றம்!

கொலை வழக்கில் கைதாகியுள்ள திமுக எம்.பி. ரமேஷை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அனுமதி கொடுத்து உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை செய்து வந்த கோவிந்தராசு எனும் பாமக நிர்வாகி கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கோவிந்தராசின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் திமுக எம்பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த திமுக எம்பி ரமேஷ் கடந்த 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமகவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக எம்.பி ரமேஷை மூன்று நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் மூன்று நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், காவல்துறையினர் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ரமேஷை இன்று காலை ஆஜர்படுத்தினார்கள். மேலும், சிபிசிஐடி போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதி பிரபாகரன் சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More