திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்!

தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில்

By surya | Published: Jun 04, 2020 06:56 PM

தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அவரின் உடல்நிலை கவலைக்கிடத்தில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை சென்ற கொரோனா, தற்பொழுது எம்.எல்.ஏ-வயும் விட்டுவைக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்நிலையில், அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாவும் தெரிவித்தது.

Step2: Place in ads Display sections

unicc