27 C
Chennai
Friday, October 22, 2021

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிதேர்தலில் திமுக முன்னிலை..!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிதேர்தலில் திமுக முன்னிலை உள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகளை எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிதேர்தலில் திமுக முன்னிலை உள்ளது. தென்காசி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 9-வது கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார். பொள்ளாச்சி தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் இடைத்தேர்தலில் திமுகவை சார்ந்தவர் முன்னிலை.

அதுபோல ஈரோடு 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சதாசிவம் முன்னிலையில் உள்ளார். பழனி ஊராட்சி ஒன்றியம் 11-வது வார்டு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ராமராஜ் முன்னிலையில் உள்ளார்.  ஏற்கனவே திமுகவை சேர்ந்த 5 ஒன்றிய கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

Hot Topics

Read More