தேர்தல் பரப்புரைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதியாக வருவார்-பிரேமலதா விஜயகாந்த் 

11

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்  ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதியாக வருவார் என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்  ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் ,தேர்தல் பரப்புரைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதியாக வருவார். தூத்துக்குடியில் 2 பெண்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது, ஆரோக்கியமானது தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் பற்றி மத்திய அரசிடம் அழுத்தமாக எடுத்துரைப்போம் என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தெரிவித்துள்ளார்.