நாராயணசாமி 5வது நாளாக தர்ணா!!நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு!!

 நாராயணசாமி 5வது நாளாக தர்ணா!!நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு!!

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி  தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில்  முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.

 

Image result for NARAYANASAMY DHARNA

இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.தர்ணாவில் இருந்துகொண்டே  அரசுப் பணிகளை கவனிக்கிறார்.இன்றும்  புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி 5வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில்  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.

இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆளுநர் பொறுப்பில் இருக்கும் கிரண்பேடி பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் செயல், ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் செயலை போன்றது.துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *