, ,

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது – கேபி அன்பழகன்!

By

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது எனக் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் பொது கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சிதான் கொண்டு வந்தது என கிராமசபை என்று சொல்லி கூட்டம் கூட்டி பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும், 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஆட்சி தொடர்வதற்கு சபதம் ஏற்போம் எனவும், ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கான தலையெழுத்து அவருக்கு எழுதவில்லை எனவும் அன்பழகன் அவர்கள் அக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

Dinasuvadu Media @2023