முதலமைச்சரின் அறிவிப்புகள் அரைவேக்காட்டுதனமானது.! மு.க.ஸ்டாலின் காரசார ட்வீட்.!

எஞ்சினியரிங் மாணவர்களின் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தினாலே (அரியர்ஸ் உட்பட) பாஸ் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை ஏற்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில், ‘அரியர்ஸ் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்ததில் இருந்தே குழப்பங்கள் நீடிக்கின்றன.

சாத்திய கூறுகளை ஆராய்ந்து தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என கூறியிருந்தோம். அதனை அரசு பொருட்படுத்தவில்லை.

முதமைச்சரின் முடிவு அவசரமானது, அரைவேக்காட்டுதானமானது என்பதை தற்போதைய அறிவிப்புகள் நிரூபித்து வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு AICTE எதிர்ப்புகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அறியர்ஸ் தேர்வுகளை நடத்த தயார் என தமிழக அரசு தெரிவித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர்கல்விதுறை அமைச்சர்களும், மற்றவர்களும் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருவது அரசின் தெளிவின்மையை காட்டுகிறது.

கயிறு இழுக்கும் போட்டியில் வதைபடுகிறது மாணவர்களின் எதிர்காலம். சுய விளம்பரத்திற்காக அரைவேக்காட்டுதனமாக செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை பாலாக்காதீர்கள். ‘ என பதிவிட்டுருந்தார்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

5 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

6 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

9 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

9 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

10 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

10 hours ago