திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்திக்க உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்திக்க உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

  • admk |
  • Edited by venu |
  • 2020-08-15 09:00:36

திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்திக்க உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .இதனிடையே  வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.இதன் பின் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வந்த ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுகவில் இருந்துதுரைசாமி,செல்வம் உள்ளிட்டோர் வெளியேறிவிட்டனர். ஏற்கனவே கருணாநிதி மறைவிற்கு பின்னர் அழகிரி தனித்து உள்ளார்.தற்போது மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.ஸ்டாலின் கனிமொழிக்கு எதிராக உதயநிதியை முன்னிறுத்தி வருகிறார். திமுக மிகப்பெரிய பிளவுகளை சந்திக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!