திமுகவினர் திருந்தவே இல்லை – டிடிவி தினகரன்

திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம்.

திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மறுபடியும் மின்தடை நிகழ்ந்து வருகிறது. விடியல் ஆட்சியில் இருந்த தமிழகம்தான் உருவாகியுள்ளது. திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து விமரித்தார். அம்மா கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் இல்லை. தாலிக்கு தங்கம் திட்டம் இல்லை, அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது.

ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் என இவர்களுக்கு பயனுள்ளதாக இருந்த அம்மா உணவகத்தில் உணவு பற்றாக்குறையை இவர்களே செயற்கையாக ஏற்படுத்தி மூடி வருகின்றனர் என குற்றசாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கைகள் ஹிட்டலர் பணியில் உள்ளது. நகைக்கடன், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வேற்று அறிவிப்புகளாகவே உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவர்க்கும் தீங்கு விளைவித்துள்ளது திமுக அரசு.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, அது உச்ச நீதிமன்றம் உத்தரவு. இதில் மத்திய அரசு, தமிழகத்துக்கு விலக்கு அளித்து, ஒரு சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியும். மக்களை ஏமாற்றி  எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் எண்ணத்தில் திமுக செயல்பட்டுள்ளது. இதனால் வரும் காலத்தில் திமுக பெரும் தோல்விகளை சந்திக்கும். இதுபோன்று சிறுபான்மை மக்களை முதலமைச்சர் ஏமாற்றி வருகிறார் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment