அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு – அண்ணாமலை

அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு.

நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. இந்த தேர்வானது 13 மொழிகளில் 198 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுதவிருந்தார். இவர் இன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் NEET தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திமுக அரசு நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு.’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.