நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி பெற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்!!

அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி,  திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 125 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்று 10 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்கவுள்ளார்.

இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும் போட்டியிட்டனர். இந்த தொகுதி வாக்கு எண்ணிக்கையில், திமுக பொதுச்செயலாளர், வேட்பாளருமான துரைமுருகன் ஆரம்ப முதலே பின்னடைவில் இருந்து வந்தார். பின்னர் அதிமுக, திமுக என மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில்,  துரைமுருகன் 57 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

அதாவது, 17-வது சுற்று முடிவில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 55,324 வாக்குகளும், ராமு 55,267 வாக்குகளும் பெற்றுருந்தனர். மீண்டும் சரிவை கண்ட துரைமுருகன், இந்த முறை வெற்றி பெற முடியுமா என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், முடிவுக்கு வந்தது இழுபறி… 754 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராமுவைப் பின்னுக்குத் தள்ளி,  திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

விஜயகாந்த் ரொம்பவே விரும்பி சாப்பிட்டது எது எல்லாம் தெரியுமா?

விஜயகாந்த் : பள்ளி பருவத்தில் இருந்து விஜயகாந்த் விரும்பி சாப்பிட்டவை பற்றி அவரே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் அதிகமாக செய்த உதவிகளில் ஒன்று சாப்பாடு…

18 mins ago

CSK ஆறுச்சாமிக்காக வருத்தப்பட்ட ரோஹித் சர்மா.! இந்த விஷயம் சுத்தமா பிடிக்கல..!!

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் 'இம்பாக்ட் பிளேயர்' விதியை பற்றி பேசி இருக்கிறார். ஐபிஎல்லில் உள்ள இம்பாக்ட்…

23 mins ago

தோனி அமெரிக்கா வருவார்.. ஆனா அங்க வருவது கஷ்டம்.. ரோஹித் சர்மா!

Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20…

57 mins ago

இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

2 hours ago

T20 உலகக்கோப்பை அணியில் இவர்களுக்கு வாய்ப்பா? ஆலோசனையில் நடந்தது என்ன?

t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…

2 hours ago

பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ…

Election2024 :  இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…

2 hours ago