திமுக அதிருப்தியாளர்கள் பாஜக வரவேண்டும் – வி.பி.துரைசாமி

திமுக அதிருப்தியாளர்கள் பாஜக வரவேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .இதனிடையே சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுகவை சேர்ந்த கு.க. செல்வம்.இதன் பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், நட்டாவை சந்தித்தத்தற்காக என்மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று தெரிவித்தார்.

இதன் பின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.  கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக  திமுக தலைமை  அறிவிப்பு வெளியிட்டது .டெல்லியில் இருந்து சென்னை வந்த திமுக எம்எல்ஏ  கு.க.செல்வம் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  திமுக அதிருப்தியாளர்கள் பாஜக வரவேண்டும்.திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., கு.க.செல்வம் பாஜகவில் இணையவில்லை என்று தெரிவித்துள்ளார்.