கொடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது திமுக – அண்ணாமலை

கொடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது திமுக என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் புதிய வாக்குமூலங்களால், சில திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  கொடநாடு விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கொடநாடு வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் இல்லை. முடித்து வைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வரின் பெயரை சேர்த்திருக்கிறார்கள். இது அரசியல் காழ்புணர்ச்சி என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கை மீண்டும் விசாரிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் திமுக அரசின் ஆட்சி இனிப்பு, கசப்பு, காரம் கலந்த காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்பட்டது இனிப்பான விஷயம். ஆனால், தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாதது, பாஜக தொண்டர்கள் கைது செய்து, அவர்கள் மீது பொய்யான நடவடிக்கைகளை மேற்கொண்டது, இதெல்லாம் கசப்பு மற்றும் காரமான விஷயம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.