Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுவிஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்.? உண்மை நிலவரம் என்ன.? 

விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்.? உண்மை நிலவரம் என்ன.? 

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார்.

தொடர் மருத்துவ சிகிச்சை… இன்றாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

அப்போது, அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும், தேமுதிக கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு தற்போது வரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்த்துக்கு நுரையீரல் பகுதியில் சளி அதிகமாக உள்ளதால் அவ்வப்போது அவருக்கு மூச்சி விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அண்மையில் தேமுதிக சார்பில் வெளியான தகவலின்படி, செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என்றும், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்கவே ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும், தாமாகவே விஜயகாந்த் சுவாசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

உடல்நல பரிசோதனைகள் முழுதாக நிறைவடைந்த பிறகு நாளை மறுநாள் விஜயகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.