30 C
Chennai
Saturday, October 23, 2021

“நமக்கான காலம் நிச்சயம் வரும்;உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்” -தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றுது.இதனையடுத்து,வாக்கு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று முடிந்த நிலையில்,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.இதில்,திமுக கூட்டணி  பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.

இதற்கிடையில்,விஜய் மக்கள் இயக்கமும் பல இடங்களில் வெற்றி பெற்றது.மேலும்,தேமுதிக சார்பில் போட்டியிட்டவர்களும் சில இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில்,உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கும் தேமுதிக சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி செல்வி பழனிக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடு பட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம், பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம். உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும்”,என்று பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More