DIWALI 2020: தீபாவளி எப்படி வந்துச்சு தெரியுமா .?அதன் சிறப்பம்சங்கள்.!

தீபாவளி பண்டிகையானது நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது .

தமிழர்கள் முதற்கொண்டு அனைத்து மதத்தினரும்,பிற நாட்டவர் என பலரும் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் . இந்தாண்டு நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  நராகசுரன் என்ற அரக்கன் இறந்த தினத்தை கொண்டாட தீபாவளி தினம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது . மனிதனாக இருப்பினும் துர்க்குணங்களையுடைய பூமாதேவியின் மகனான பவுமன் என்னும் நரகாசுரன் தேவர்கள் மற்றும் மக்களுக்கு பல கொடுமைகளையும், துன்பங்களையும் கொடுத்து வந்தான் . அவனது இம்சையை தாங்க இயலாத மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைக்கிறார் . ஆனால் அவர் பூமாதேவியின் மகன் என்பதால் அவரை தவிர யாராலும் கொல்ல முடியாது என்பதை புரிந்து தனது தந்திரத்தை பயன்படுத்தி போருக்கு அழைத்தார் .

நராகசுரன் மற்றும் மகாவிஷ்ணு இடையே போர் நடக்க , நரகாசுரன் அம்பு எய்தி மகாவிஷ்ணு மயக்கம் அடைவது போல் நடிக்கிறார் . அதனை பார்த்த பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமா நரகாசுரன் மீது அம்பு எய்து கொல்லப்பட்டான். அதப்போது நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே என்று வரம் கேட்க , அசுரன் அழிந்து மகிழ்ச்சி அளிக்கும் நாளை தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.இது போன்று பல கதைகள் தீபாவளிக்கு உண்டு .

பொதுவாக தீபாவளி பண்டிகையானது ஐப்பசி மாதம்தான் வரும்.  ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமும் வருவதுண்டு . தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.

தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் . வெந்நீரில் இருக்கும் கங்கை நம் பாவங்களைப் போக்குவார் என்று கூறப்படுகிறது. நரகாசுரன் கொல்லப்பட்ட தினம் என்பதால் எண்ணெய் தேய்த்து தலை மூழ்கி பாவங்களை போக்குவதாகவும் , அவரது இறந்த தினத்தை கொண்டாடுவதற்காக புத்தாடை உடுத்தியும் , பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுகின்றனர் . மேலும் தீபாவளி தினத்தன்று பெண்கள் சேலையும் , ஆண்கள் வேட்டி உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை உடுத்துவது வழக்கம் . அதே போன்று தீபாவளிக்கு இனிப்பு வகைகளான முறுக்கு,அதிரசம், சீடை , ரவா லட்டு,பணியாரம், வடை , பாயாசம், அல்வா உள்ளிட்ட அனைத்தும் வீட்டினுள் செய்து அதனை மறு வீட்டிற்கு கொடுத்து அன்பையும் ஒருவருக்கொருவர் பரிமாறுவார்கள் .

இந்தாண்டு தீபாவளியானது கொரோனா சூழல் காரணமாகவும், ஒரு சில இடங்களில் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாகவும் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .