Divya Spandana

Divya Spandana: நான் சாகவில்லை.! பச்சைக்கொடி காட்டிய பொல்லாதவன் நடிகை!

By

நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்ற வதந்தி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரவி வந்த நிலையில், அந்த செய்தி உண்மையில்லை என்றும், அந்த வதந்தி முற்றிலும் பொய்யானது என நிரூபித்துள்ளார்.

ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) தமிழ் சினிமாவில், வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். நடிகையாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய திவ்யா ஸ்பந்தனா தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையில் இளம் நடிகையாக வலம் வந்தவர்.

இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லோக்சபாவின் முன்னாள் உறுப்பினரான திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்ற வதந்தி செய்தி பரவ தொடங்கியது. இருப்பினும், ஒரு பத்திரிகையாளர், நடிகையிடம் பேசி அவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

 

மற்றொரு, பெண் பத்திரிகையாளர், ஜெனீவாவில் திவ்யாவுடன் விருந்து சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போத, அந்த பெண் பத்திரிகையாளரின் போஸ்ட்டுக்கு பதிலளித்த நடிகை திவ்யா ஸ்பந்தனா “நம்ம ஊரில் விரைவில் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம், தன்னை பற்றி பொய்யான செய்திகளை பரப்பிவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.