48 நாள்கள் விரதம் இருந்த மாவட்ட ஆட்சியர்!

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள்கோவிலில்  40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் மக்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை1-ம்  தேதி முதல் கடந்த மாதம் 17-ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முதல் 31 நாள்கள் வரை அத்திவரதர்சயன கோலத்திலும், அடுத்த 17 நாள்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மேற்கொண்டு வந்தார்.பொன்னையா தினமும் கோவிலுக்கு வந்து மேற்பார்வையை கண்காணித்தார். பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் அத்திவரதரை தரிசிக்க வேண்டும் என அவர் அதிக கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் அத்திவாரத்தை வைபவத்தை ஒட்டி கோவில் பட்டாச் சாரியார்கள் போல காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொண்ணையும் 48 நாள்கள்  விரதம் இருந்தாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி அவரிடம் கேட்டபோது “ஆமாம் நான் விரதம் இருந்தேன் என தெரிவித்தார். அதை பற்றி வேறு எதுவும் அவர் கூறவில்லை.

author avatar
murugan