4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.!

கைதான 4 பேரையும், மாவட்ட கலெக்டர் விஜயலட்சு குண்டர் சட்டத்தில் கைது

By bala | Published: Jul 08, 2020 01:14 PM

கைதான 4 பேரையும், மாவட்ட கலெக்டர் விஜயலட்சு குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு உத்தரவிட்டார்

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ்குமார், இவர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார், இந்த படுகொலை குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் திண்டுக்கல் புரத்தை சேர்ந்த டைசன், மற்றும் டைசன் வினோ ஜான்சன் வினோ மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த வினோத் ஆகியோர் மூன்று பேரையும் கைது செய்தனர் இதற்குப் பிறகு மூன்று பேரையும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இதை போல் திண்டுக்கல் அருகே சங்கர் என்பவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார், இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மேலும் கொலை வழக்குகளிலும் கைதான 4 பேரையும், மாவட்ட கலெக்டர் விஜயலட்சு குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு உத்தரவிட்டார் , மேலும் இந்த நிலையில் போலீஸ் சக்திவேல் பரிந்துரை செய்தார். இந்நிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த டைசன் வினோ, ஜான்சன் வினோ, ஆரோக்கிய தனிஸ்லாஸ் என்ற வினோத், வெங்கடேஷ் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து 4 பேரையும், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Step2: Place in ads Display sections

unicc