ரஜினிக்கு உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

ரஜினிக்கு உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் ரூ.65 லட்சம் கடன் பெற்றதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. சினிமா பைனான்சியரிடம் பெற்ற கடனை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.  பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிடக்கோரி போத்ரா வழக்கு தொடுத்திருந்தார்.

பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்தான் வழக்கு தொடர முடியும் என தனி நீதிபதி தெரிவித்து, நீதிமன்ற உத்தரவிட முடியாது என கூறி ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா இறந்துவிட்டதால் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அவரது மகன் ககன் போத்ரா மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கில், ரஜினி பணம் தருவார் என்ற கடிதமே போலி, எவ்வித பணமும் தரவேண்டியது இல்லை என கஸ்தூரி ராஜா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் தொடர்ந்து 3 முறைக்கு மேல் ஆஜராகவில்லை, இதனால் வழக்கை நடத்துவது குறித்து ஆர்வம் இல்லை என்றும் வழக்கை நடத்த ஆர்வம் காட்டாமல், இழுத்தடித்து நிலுவையில் வைப்பதேயே நோக்கமாக கொண்டுள்ளதால் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube