#BREAKING: பணி பெற மதம் மாறினால் வேலை நீக்கம்- உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டில் பணி பெற மதம் மாறியிருந்தால் வேலை நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாதவரை நூலக அதிகாரியாக நியமித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய கல்வி தகுதியை ஆராயாமல் பல்கலைக்கழகம் முறையாக விசாரணை செய்யாமல் பணி நியமனம் செய்தது தவறு, பின்னர் பதவி உயர்வு வழங்கியதும் தவறு என்றும் அது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார்.

மேலும், அந்த பதவியை வழங்கியது தொடர்பான உத்தரவை ரத்து செய்ததுடன், அவருக்கு பாதி ஊதியத்திற்கான ஓய்வூதியத்தை மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனத்தின்போது வெளிப்படைத்தன்மை பின்பற்றவேண்டும். போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக தெரியவந்ததால் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பணிநீக்கம் செய்து ஊதியத்தை திரும்ப வசூலிக்க வேண்டும் எனவும் பல்கலைகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இடஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெறுவதற்காகவும், பதவி உயர்வு பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் பணி நியமனத்தை ரத்து செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

author avatar
murugan